Back
temple-details

டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • time : 2024-11-17

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று காரணமாக கடந்த 4 நாட்களாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் மிக அதிகமான நெல்லை மாவட்டம் நாலுமுக்கு 105 மிமீ மழை பதிவாகியுள்ளது.கிழக்கு திசை காற்றின் மூலம் கடந்த 4 நாட்களில் மட்டும் மாஞ்சோலை மலைப்பகுதி 401 மிமீ மழையை பெற்றுள்ளது. 

இன்றைய வானிலை நிலவரத்தை பொறுத்தவரை வட மாவட்டங்களில் மழை குறையும் தென் மாவட்டங்களில் மழை தொடரும் : 

வறண்ட வாடை காற்று தமிழகத்தில் ஊடுறுவதால் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் வேலூர் திருப்பத்தூர் தர்மபுரி கிருஷ்ணகிரி இராணிப்பேட்டை ஆகிய வட மாவட்டங்களில் குளிரும் பனிப்பொழிவின் தாக்கமும் படிப்படியாக அதிகரிக்கும் இதே நிலை அடுத்த ஒரு வாரத்திற்கு தொடரும். 

 தென் மாவட்டங்களை பொறுத்தவரை இன்று மாலை நேரங்களில் நெல்லை தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். தமிழக கடலோர பகுதியை பொறுத்தவரை கடலூர் விழுப்புரம் தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை ஆகிய கடலோர மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.


அரியலூர் பெரம்பலூர் விருதுநகர்  மதுரை சிவகங்கை ஆகிய உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

தற்போது பகல் நேரங்களில் வெயில் காணப்பட்டாலும் மாலை நேரங்களில் நல்ல மழை பெய்யும். இராமேஷ்வரம் பாம்பன் தனுஷ்கோடி தங்கச்சிமடம் தூத்துக்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் உவரி கூடன்குளம் ஆகிய இடங்களில் இன்று இரவு  கனமழை பெய்யும். 

நெல்லை மலைப்பகுதிகளான மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

-Tenkasi Weatherman. 

நமது வாட்சப் குழுவில் இணைய விரும்பும் மக்கள் தங்கள் ஊர் பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றின் விவரங்களை 9443687841 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும். 

For More updates : www.tenkasiweatherman.com

Write Reviews

2 reviews

  • VEERA PANDIAN
    1 years 10 months & 6 days ago

    Good

    Admin Reply

  • Kandasamy k.s
    1 years 10 months & 3 days ago

    விவசாயம்

    Admin Reply